2 சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்.

51பார்த்தது
2 சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், புதூர் புங்கனை ஊராட்சிக்குட்பட்ட சந்தரப்பட்டி, பெரியகோட்டக்குள்ளம் ஆகிய ஊராட்சிக்களுக்கான முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1 கோடியே 20 இலட்சம் மதிப்பில் 2 சாலை பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, முன்னிலையில் நேற்று துவக்கி வைத்தார். உடன் பர்கூர் எம். எல். ஏ. தே. மதியழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி