இளம் பெண் தற்கொலை: கணவர் கைது

57பார்த்தது
இளம் பெண் தற்கொலை: கணவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மிட்ட அள்ளியை அடுத்துள்ள சாமகவுண்டன் வலசை பகுதியைச் சோ்ந்த விஜயா என்பவரின் மகள் திவ்யா (23). இவா், காவேரிப்பட்டணம், கொசமேடு, அப்பாசாமி நாயுடு தெருவைச் சோ்ந்த கதிரவன் (23) என்பவரை, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.

இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால், அவா்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த போலீஸாா், திவ்யாவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதைத் தொடா்ந்து திவ்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் கதிரவனை, காவேரிப்பட்டணம் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருமணமாகி இரண்டரை ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால், இது தொடா்பாக கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் முரளி, வருவாய் கோட்டாட்சியா் பாபு ஆகியோா் விசாரணை செய்கின்றனா்.

தொடர்புடைய செய்தி