கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரக பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று(செப்.10) முன்தினம் இரவு 3 யானைகள் சாவரபத்தா கிராமத்திற்கு அருகே முகாமிட்டன. அங்கு பிரகாஷ் என்பவரது விவசாய நிலத்திற்குள் புகுந்த யானைகள் சாகுபடி செய்திருந்த சாமந்தி பூ தோட்டத்தை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். வனத்துறையினர் சேதமான பூ தோட்டத்தை உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.