கிருஷ்ணகிரி மாவட்டம் உனிசெட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ரூபா மற்றும் கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோர் சேர்ந்து கொலை செய்த வழக்கில் ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கில் 2 பேருக்கும் நீதிபதி சந்தோஷ் ஆயுள் தண்டனையும் தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து 2 பேரை தேன்கனிக்கோட்டை போலீசார் பல்வேறு சிறைகளில் அடைத்தனர்.