கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள கெலமங்கலம் அடுத்த ஜக்கேரி பகுதியில் ஒன்னுகுறுக்கி பகுதியை சேர்ந்த வெங்கடேசப்பா இவருடைய மனைவி நாகம்மா (59) இவர் விளைநிலத்தில் அறுவடை செய்து கொண்டிருந்த பொழுது அந்த பகுதியில் சுற்றி வந்த ஒற்றை காட்டு யானை நாகம்மாவை தாக்கியதில் படுகாயமடைந்து நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.