கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளி ஊராட்சி பெரிய பூதகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (38). சேர்ந்த மணி என்பவரிடம் 80 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் சிட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொடுக்குமாறு ராஜேந்திரனின் உறவினர் வெங்கடேசன் சந்தனப்பள்ளி கிராம நிர்வாக அதிகாரி மாதேஸ்வரன் (53) என்பவரிடம் கேட்டுள்ளார்.
அப்போது ரூ. 4 ஆயிரம் கொடுத்தால்தான் சிட்டாவில் பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று மாதேஸ்வரன் கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நேற்று செப் 26ம் தேதி தகவல் கொடுத்துள்ளார்.
போலீசார் அறிவுரைப்படி ரசாயனப்பொடி தழுவிய ரூபாய் நோட்டுகள் ரூ. 4 ஆயிரத்தை கிராம நிர்வாக அதிகாரி மாதேஸ்வரனிடம், வெங்கடேசன் கொடுத்த போது அவரை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாதேஸ்வரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.