கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீசார் டவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த கோரிபாளையம் மாதேஷ் (44) அஞ்செட்டி மராட்டி தெரு வெங்கடேசன் (54) ஏரிகோடி முருகன் (46) கிருஷ்ணன் (32) வேணுகோபால் (29) மாதேவன் (51) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 600 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.