கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மல்லுப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் சம்வம் அன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடிற்கு திரவரவில்லை என்று இது பற்றி அவரது பெற்றோர் ராயக்கோட்டை காவல் நிலையித்தில் புகார் கொடுத்தனர். அதில் தருமபுரி அருகே உள்ள காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்ராஜ் என்பவர் தங்களது மகளை காதலித்து வந்ததாகவும், இதனால் தினேஷ்ராஜ் அவரை கடத்திச் சென்றி ருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். அதன்பேரில், போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகிறார்கள்.