டூவீலர்கள் மோதல் ஒருவர் பலி.

63பார்த்தது
டூவீலர்கள் மோதல் ஒருவர் பலி.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமதுரை (38). இவர் சூளகிரி அருகே அட்டகுறுக்கி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். சம்பவம் அன்று அவர் ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றோறு டூவீலரில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே ராமதுரை உயிரிழந்தார். இது குறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி