ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ. டி. எம். , இயந்திரத்தை கடந்த, 5ல், மர்ம கும்பல் உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. கடந்த, 6 அதி-காலை, 3: 00 மணிக்கு ஓசூரில் பாகலுார் சாலையில் என். ஜி. ஜி. ஓ. எஸ். , காலனியில் உள்ள ஐ. டி. பி. ஐ. , வங்கி ஏ. டி. எம். , இயந்திரத்தை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து, 14. 50 லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் கொள்ளையடித்தது.
ஓசூர் பகுதியை குறிவைத்து, வடமாநில கும்பல் கொள்ளை சம்ப-வங்களை அரங்கேற்றி வருகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, கொள்ளை கும்பல் ஓசூர் அல்லது பெங்களூருவில் முகாமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாரால் குற்-றவாளிகளை நெருங்க முடியவில்லை. இது மக்களை அதிர்ச்சிய-டைய செய்துள்ளது. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.