கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் பஞ்சாச்சிபுரம் கிராமம் முதல் ஏரி வரை சுமார் 19. 97 இலட்சம் மதிப்பில் தார்சாலை, பஞ்சாச்சிபுரம் கிராமம் முதல் தேன்கனிக்கோட்டை மெயின் சாலை வரை 23 இலட்சம் வரை தார்சாலை அமைப்பதற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், MLA தலைமையில் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
உடன் தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சர்வேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், சுரேஷ் , ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சீனிவாஷ், கிருஷ்ணப்பா, கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.