ஓசூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

77பார்த்தது
ஓசூர்: கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள கல்லாவி சுரத்தூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் சிவாஜி (19). இவர் ஓசூர் செம்படதெருவில் பெற்றோருடன் தங்கி மிடிகிரிப்பள்ளியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி. பி. ஏ. 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிவாஜி, நேற்று முன்தினம் அவர் தங்கி உள்ள வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த ஓசூர் டவுன் போலீசார் மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி