கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுகாதார அலுவலர் ராஜேஷ் தலைமையில் 100 மரக்கன்றுகள் சுகாதார நிலை வளாகத்தில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.