கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக விஜயபூரணி பணி புரிந்து 60 வயது வயதை நிறைவு செய்ததை தொடர்ந்து பணி நிறைவு பராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமைதாங்கி வாழ்த்தி பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்பாபு (வ. ஊ) சாந்தி (கி. ஊ) ஆகியோர் பணி நிறைவு ஆனையை வழங்கி வாழ்த்தி பேசினார்கள் ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜிய பூரணி ஏற்புரை வழங்கி அணைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.