கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தப்பகுழி பகுதியில் உள்ள பஸ்வேஸ்வரன் சிவன் கோயிலை நேற்று தண்ணீர் சூழ்ந்தது. கோயிலை சுற்றி வெள்ளம் சென்றதால் நேற்று பக்தர்கள் ஆபத்தை உணராமல் பரிசலில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர் தகவல் அறிந்ததும் வருவாய்துறை அதிகாரிகள் கோயிலுக்கு சென்று பக்தர்களை கோயிலுக்கு செல்ல தடைவிதித்தனர்.