கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 31 வயது பெண் சம்பவம் அன்று அவருடைய வீட்டின் முன் நின்று இருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (30) என்பவர் பெண்ணிடம் கையை பிடித்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் அஞ்செட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்தனர்.