கிருஷ்ணகிரி மவட்டம் அஞ்செட்டி அருகே கோட்டையூர் கிராமத்தில் கடந்த 1985-ம் ஆண்டு ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. கடந்த 40 ஆண்டுகள் ஆகியும் பல்வேறு காரணங்களால் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி சார்பில் நேற்று செப்-30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம். எல். ஏ. டில்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.