கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாநகர மேயர் எஸ். ஏ. சத்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை ஆணையர் டிட்டோ முன்னிலை வகித்தார். அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக ஒசூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திமுக கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து தனியார் உணவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.