கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி சின்ன பழனி பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடி ஆட்டம், அழகு குத்துதல், போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சின்ன பழனி பாலமுருகன் சுவாமிக்கு இராஜ அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கபட்டது. பக்த கோடிகள் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.