கிருஷ்ணகிரி: 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி

61பார்த்தது
கிருஷ்ணகிரி: 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியை அடுத்த நாகமங்கலம் கிராமத்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி மனிஷ் படேல் (18) தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவம் அன்று கட்டுமான பணியில் ஈடுபட்டபோது 3-வது மாடியிலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி