மூன்று இளம் பெண் உட்பட 4 பேர் மாயம்

64பார்த்தது
மூன்று இளம் பெண் உட்பட 4 பேர் மாயம்
ஓசூர், சூளகிரியில், 3 இளம் பெண்கள் உட்பட, 4 பேர் மாயமாகி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரின் மகள் சில்பா, 24. தனியார் நிறுவன ஊழியர்; கடந்த, 5 காலை மாயமானார். அவரது தாய் லட்சுமி, 52, ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், தன் மகளுடன் பணியாற்றும் கிரண், 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர். ஓசூர் தனியார் கல்லுாரியில் பி. சி. ஏ. , முதலாமாண்டு படிக்கும், ஓசூரை சேர்ந்த, 17 வயது மாணவி கடந்த, 1 ல் மாயமானார். அவரது தாய், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதில், திருநெல்வேலியை சேர்ந்த சுரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர். ஓசூரை சேர்ந்த ரவி என்பவரின் மகள் மோனிஷா, 21; கடந்த மாதம், 28 ல் வீட்டிலிருந்து மாயமானார். அவரது தந்தை நேற்று முன்தினம் மத்திகிரி போலீசில் கொடுத்த புகாரில், கர்நாடகா மாநிலம், சந்தாபுரத்தை சேர்ந்த, 18 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்சூளகிரி அருகே எர்ரண்டப்பள்ளியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; அங்கிருந்து கடந்த மாதம், 18 ல் மாயமானார். அவரது தந்தை மது, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

தொடர்புடைய செய்தி