கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள பாரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த 23 வயது பெண் கூலித்தொழிலாளியான இவர் கடந்த 22-ம் தேதி அன்று வீட்டிலிருந்து மாயமானார். இவருடைய கணவர் போச்சம்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார் அதில் மண்ணடிப்பட்டியை சேர்ந்த சந்துரு (21) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.