கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் வருவாய் துறையால் வழங்கப்படும் சான்றிதழ்களை பெற 60 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக வசூலிப்பது கண்டறியப்பட்டாலோ, புகார்கள் வந்தாலோ சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தின் அங்கீகாரம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். மேலும் இதுகுறித்து 1077, 1100 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.