மரம் வெட்டிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

80பார்த்தது
மரம் வெட்டிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜ கடை அருகே நாரலப்பள்ளியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பன். இவருடைய மனைவி சரசா(46) இவர் முருங்கை மரத்தின் கிளைகளை நேற்று முன்தினம் வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கிளையில் மீது மின் ஒயர் பட்டதில் மின்சாரம் பாய்ந்தது. சரசா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மகராஜகடை போலீசார், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி