கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூருக்கு பக்தர்கள் தனியார் பேருந்தில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்இதில் 40 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பேருந்து விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.