கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் பேடரப்பள்ளி ஏரிக் கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான விதமாக வந்த இரண்டு பேரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் 420 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுசில்தாஸ் (32), திரிட்டி சுந்தர்தாஸ் (28) என்பதும், ஓசூர் பேடரப்பள்ளி அண்ணா நகரில் தங்கி கூலி வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்