கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில், 99 ஆண்டுகள் பழமையான புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில், புனித இஞ்ஞாசியாரின் தேர்த்திருவிழா நான்கு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக கத்தோலிக்க போப்பாண்டவர் மூலம் லோயாலோ இக்னேஷியஸுக்கு புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. அவரின் நினைவாக, கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் 99 ஆண்டுகளுக்கு முன், புனிதர் இஞ்ஞாசியார் பெயரால் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. புனித இஞ்ஞாசியார் தேர் திருவிழா கடந்த சனியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனித இஞ்ஞாசியாரின் திருத்தேர் அருள்தந்தை, தேவசகாயம் அவர்களால் மந்தரிக்கப்பட்டு, ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய தேர்பவணி பழைய பேட்டை குப்பம் ரோடு, மீன் மார்கெட் வழியாக சென்று, மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி. எலத்தகிரி, கந்திகுப்பம் மற்றும் சுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்துக்கொண்டனர்.