கிருஷ்ணகிரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

78பார்த்தது
கிருஷ்ணகிரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலந்தாய்வு நடந்து வரும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட வடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களை, குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்கக்கல் வித்துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு பொதுமாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி