கிருஷ்ணகிரி: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

44பார்த்தது
கிருஷ்ணகிரி: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியின் கீழ் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி 12-வது வார்டு பாப்பாரப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. மதியழகன் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களிடம் பேசும்போது, மண், மானம், மொழி காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை முதல்-அமைச்சர் தொடங்கி உள்ளார். அதன்படி நாங்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளோம். 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே தமிழகத்தைக் காக்க அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி