புனித அந்தோனியாரின் திருவுருவ சிலை, புனித சூசையப்பர் சிலை அன்னை ஆரோக்கிய மேரி சிலை மற்றும் இயேசு பிரான் சிலை ஆகியவற்றுக்கு சிறப்பு மலர் அலங்காரங்களுடன் மின் விளக்குகளாலும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன.
பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தை இயேசுவை கையில் ஏந்திய தூயமரியன்னையின் திருவுருவம் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட கொடியானது ஆலயத்தின் முன்பு ஏற்றப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சியை போல எங்கும் கொடியேற்றும் நிகழ்ச்சி ஏராளமானவர்கள் மலர் தூவி வழிபாட்டுடன் நடைபெற்றது.
தொடர்ந்து, உலக நன்மை வேண்டியும், தற்பொழுது இஸ்ரேல் நாட்டில் நிலவும்
போர் பதற்றம் அமைதி நிலவ வேண்டியும், மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டியும், ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவைச் சேர்ந்த பூண்டி இசை குழுவின் சங்கமம் மெலோடிஸ் சார்பில் ஏராளமான கிறிஸ்தவ பக்தி பாடல்களை பாடி பரவசத்தில் ஆழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பிரபல திரைப்பட நடிகரும் நடன இயக்குனருமான டானி சிறப்பு பிரார்த்தனை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜேபி (எ) ஜெயபிரகாஷ்,
விழா ஏற்பாடுகளை இந்தியன் சில்ரன் ஆங்கில பள்ளியின் முதல்வரும் அந்தோணியார் ஆலய நிர்வாகியுமான கே. விஜயகுமார், ஆலய நிர்வாக குழுவினர் ரேய்ச்சல்மேரி விஜயகுமார், யுவராஜ் சிறப்பாக செய்து இருந்தனர்.