உரிமை சட்ட வார விழாவினை வருவாய் பாபு துவக்கிவைத்தார்

688பார்த்தது
தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில்
நடைப்பெற்ற
வாக்கத்தான் போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பாபு கொடியசைத்து துவக்கிவைத்தார்.
.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தகவல் அறியும் முன்னிட்டு, மாரத்தான் மற்றும் வாக்கத்தான் விழிப்புணர்வு
போட்டி நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணி கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து ராயக்கோட்டை பைபாஸ் வழியாக விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது. இப்பேரணியில் தீயணைப்பு துறை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி NSS, scouts, மாணவ மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்
அப்போது மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
இப்பேரணியில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை அலுவலர் தமகாலிங்க மூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் வெங்கடேஷ், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் விஜயகுமார், ஆசிரியர் பெருமக்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி