மாட்டு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவருக்கு காப்பு.

67பார்த்தது
மாட்டு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய பெலவர்த்தி பகுதியை சேர்ந்தவர் ரகு (30) மாட்டு வியாபாரியான. இவர் சம்பவம் அன்று நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் ரகுவிடம் இருந்த 750 ரூபாய் பணத்தை பறித்து சென்றார். இது குறித்து அவர் மகராஜகடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வியா பாரியிடம் பணத்தை பறித்தது நலகுண்டலப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ் குமார் (19) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி