கிருஷ்ணகிரி: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பு

75பார்த்தது
கிருஷ்ணகிரி: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கி விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். மேலும் தொண்டு நிறுவனங்கள் இந்த விதைப்பந்துகளை வீசுகின்றன இதன் மூலம் நமது நாட்டின் வனப் பரப்பை அதிகரிக்க இயலும் என்று கூறினார். இந்த ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் தேசிய பசுமைப்படை மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்று விதைப்பந்துகளை தொடர்ந்து தயாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி