கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பழைய அரசம்பட்டியில் உள்ள அரசமர ஆஞ்சநேயருக்கு இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் இதில் தங்ககவசம் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.