கேலமங்கலம் அருகே விஷம் குடித்து பிளஸ்- 2 மாணவி தற்கொலை.

77பார்த்தது
கேலமங்கலம் அருகே விஷம் குடித்து பிளஸ்- 2 மாணவி தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே தட்டச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (26). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதனால் தனது படிப்பு பாதிக்கப்பட்டதாலும் கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் அன்று மாணவி விஷம் குடித்து மயங்கி நிலையில் மாணவியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மாணவி உயிரிழந்தார். இது குறித்த கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை குழந்தை திருமணம் செய்த அஜித்தை நேற்று கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி