கிருஷ்ணகிரியில் அரை மணி நேரத்திற்கு மேல் வெளுத்த மழை

1879பார்த்தது
கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கடும் அனல் காணப்பட்டது. இதனிடையே மாலை 5 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வர்ணபள்ளி, மகாராஜா கடை, பர்கூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் மிதமான காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மழையால் சாலைகளில் தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி