பேருந்துகளை அமைச்சர் சக்கரபாணி கொடி அசைத்து துவக்கி வைத்தார்

59பார்த்தது
.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நகர மற்றும் புறநகர பேருந்துகள் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புற உள்ள கிராமங்களுக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. அரசு சார்பில் இயக்கப்படும் நகர பேருந்தில் மகளிர் மற்றும் பள்ளி மாணவர் மாணவிகள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எண்ணேகொள்புதூர், சார்ப்பர்த்தி, ஆகிய இரு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மாணவ, மாணவிகள், தங்கள் கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் 3, 464 பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வழித்தடங்கள் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதை அடுத்து இன்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு வழித்தடம் நீடிப்பு செய்த இரண்டு நகரப் பேருந்துகளை மற்றும் கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மாற்றாக புதியாத நான்கு பேருந்துகளை தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரயு, சட்டமன்ற உறுப்பினர் மதியழகன்
நகர மன்றதலைவர் பரிதாநவாப், போக்குவரத்து துறை அலுவலர்கள், கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி