கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (28) வேன் டிரைவரான இவருடைய தந்தை கடந்த ஒரு மாதம் முன்பு இறந்து விட்டார். தாய் உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்து கவுதம் சம்வம் அன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கவுதமின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்டு நடத்தி வருகிறார்கள்.