கிருஷ்ணகிரி நகரில் அடிக்கடி டூவீலர்கள் திருட்டு போனதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில போலீசார் வசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் டூவீலரை திருட முயன்ற இம்ரான் (28) என்பவர்சம்வம் அன்று பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணை நடத்தியதில் அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கடந்த ஒரு மாதத்தில் ஆறு டூவீலரை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதை அடுத்து, டூவீலர்கள் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, பாரதி நகர் இம்ரான், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அம்ஜத் (26) திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வினோத்குமார் (34) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.