கிருஷ்ணகிரி: டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர்கள் கைது

77பார்த்தது
கிருஷ்ணகிரி: டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கியவர்கள் கைது
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பாலகுறி பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் (56) தாசம்பட்டி கூட்டு ரோடு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். இந்த நிலையில் கடையில் வியாபாரம் செய்திபோது காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவர் கடைக்கு வந்து அவர் ஒரு பீர்பாட்டில் கடன் தருமாறு கேட்டுள்ளார். 

அதற்கு முனிரத்தினம் தர மறுத்தார். இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் முனிரத்தினத்தை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசில் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி