கிருஷ்ணகிரி: தமிழக விவசாய சங்கத்தினர் பேரணி

0பார்த்தது
கிருஷ்ணகிரி: தமிழக விவசாய சங்கத்தினர் பேரணி
கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழவர் தினப் பேரணி நடைபெற்றது. இப்பேரணி விவசாய சங்க மாநிலத் தலைவர் இராம கவுண்டர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த உழவர் தினப் பேரணி நகரின் முக்கியச் சாலை வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகே முடிவடைந்தது. இதில் இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலை பொருட்கள் எந்தவித நிபந்தனைகளும் இன்றி மத்திய அரசு ஏற்றுமதி செய்ய வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி