கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குறித்து 65 பேர் உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெத்ததாளப்பள்ளி மற்றும் கிட்டம்பட்டி மலைப்பகுதிகளில் நேற்று சேலம் சரக போலீஸ் டி. ஐ. ஜி. உமா தலைமையில் கள்ளச் சாராய தடுப்பு தேடுதல் வேட்டையில் மாவட்ட எஸ். பி. தங்கதுரை, மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.