கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலை பகுதியில் கழிவுநீர் தேங்கியதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாக்கடை அடைப்பால் பள்ளி மற்றும் மார்க்கெட் பகுதி பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். உடனடியாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கழிவுநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.