கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப்பங்கேற்று திறந்து வைத்தார். உடன் இதில் கவுன்சிலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.