கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று(செப்.14) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத்தலைவர் மணிவேலு தலைமை வகித்தார். இதில் சங்கத்தை சேர்ந்த 32 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது. பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும், பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும், பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.