பேனர்கள் அனைத்தும் அனுமதி பெற்று வைக்க வேண்டும், அனுமதி பெறாத பேனர்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மாநகராட்சிக்கு 750 ரூபாய், நகராட்சி ஒன்றியத்திற்கு 500 ரூபாய் என அனுமதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பேனர்கள் வைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் பேனர்கள் வைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.