கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கசத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது 50. இவர் நேற்று முன்தினம் டிசம்பர் 31ஆம் தேதி பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவருக்குப் பின்னால் வந்த வேன் அவர் மீது வேகமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.