கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பர்கூர் சரக அளவிலான இரண்டு நாட்கள் விளையாட்டு போட்டிகள் குட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நேற்று தொடங்கியது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட
மாணவ, மாணவிகள் பங்கேற்றார். இவர்களுக்கு தொடர் ஓட்டமும், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல், உள்பட 17 வகையான
விளையாட்டு போட்டிகள் நடந்தது.