கிருஷ்ணகிரி அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி பேட்டி

1051பார்த்தது
அ. தி. மு. க. , வையும், தொண்டர்களையும், ஓ. பி. எஸ் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார் - அ. தி. மு. க. , வுக்கு பல்வேறு சோதனைகளை கொடுத்தவர் ஓ. பி. எஸ் - சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர் - இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தற்போது போட்டியிட்டவர் - இவருக்கு அ. தி. மு. க. , பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை - கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி பேட்டி.

கிருஷ்ணகிரியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி கூறுகையில், ஓ. பி. எஸ். , ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அ. தி. மு. க. , வுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் எனவும், ஒன்றிணைவோம் வா எனவும் கூறியுள்ளார். அவர் அ. தி. மு. க. , வையும் தொண்டர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.

அ. தி. மு. க. , வுக்கு பல்வேறு சோதனைகள் வந்தபோது, மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ. பி. எஸ். என்றும், அ. தி. மு. க. , தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து அடித்து, உடைத்து ஆவணங்களை திருடியவர். சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தற்போது போட்டியிட்டவர். இவருக்கு அ. தி. மு. க. , பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என ஓ. பி. எஸ்-க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி