கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெரிய வேடானூரை சேர்ந்தவர் காவேரியம்மாள் (55) இவர் கடந்த 1-ஆம் தேதி அன்று வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை, 1 லட்சம் ரூபாய் ஆகியவை திருட்டுப் போயிருந்ததை தெரியவந்தது.
இதுகுறித்து காவேரியம்மாள் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.